கனவு 2
ஒரு பொது பாத்ரூம் அருகில் இருக்கிறேன். பாத்ரூமில் இருக்கும் பொழுது மனநிலை சரியில்லாத ஆள் போலவும், பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றம் உள்ள ஒரு நபர் கதவை திறந்து கொண்டு உள்ளே வர நிற்கிறார். முகம் விபூதி, குங்குமம், மஞ்சள் போன்றவை எல்லாம் அளவுக்கு அதிகமாகவும், பார்ப்பதற்கு அகோரமாகவும் தெரிந்தார். நான் பதட்டம் கலந்த கோபத்துடன் சத்தம் போட்டேன். கதவை ஓங்கி மூடினேன்.
சிறிது நேரத்தில் யாரோ கதவை திறப்பது போல தெரிந்தது. முதலில் வந்த அகோர முகம் உள்ள நபர்தான் என நினைத்து கோபத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே கதவை திறந்தேன். வேறுநபர் தெரிந்தார். முந்தைய நபரின். தோற்றத்திற்கு நேர் எதிரான முக தோற்றம். விபூதி, குங்குமம், மஞ்சள் அனைத்தும் அழகாக பூசப்பட்டு, நல்ல சிரித்த முகத்துடன், லட்சணமான தோற்றத்துடன் தெரிந்தார்.
அவரைப் பார்த்ததும் தெரியாமல் வைதுவிட்டேன், சாரி என்றேன்.
பின் அருகில் சில கோவில் பூசாரிகள் கண்ணில் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்ததும், அனைவரும் வந்து செல்லும் சுத்தமான பொது பாத்ரூமிற்குதான் நானும் வந்துள்ளேன் என மனதில் நினைத்துக் கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக