கனவு 1
ஒரு திரையரங்கத்தில் இருக்கிறேன். எனது அருகில் தேவி அக்கா இருக்கிறார்கள். எங்களது முன் வரிசை சீட்டில் பெத்தனாச்சி அமர்ந்து இருக்கிறாள். அவளின் வலது சீட்டில் சிறு குழந்தையை அமர வைத்திருக்கிறாள். அதற்கு அடுத்த சீட்டில் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரது மனைவி உட்கார சீட் இல்லாமல் அந்த குழந்தையை பார்த்தவண்ணம் நிற்கிறார்கள். பெத்தனாச்சியிடம் குழந்தையை ஓரமாக உட்காரவைத்து அவர்களுக்கு இடம் கொடு என்றேன். ஏதோ வாய்க்குள் முனுமுனுத்தாள். எனக்கு கோபம் வந்தது. பொறுமையாக, தேவியிடம் இதுக்குத்தான் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சண்டை வருது என்றேன். பெத்தனாச்சி அந்த குழந்தையை சற்று ஓரமாக உட்கார வைத்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக