செவ்வாய், 21 மே, 2019

21-05-2019, கனவு 2

ஒரு ரூமில் உள்ள சுவற்றின் வழியாக விலங்குகள் வருவது போல் பார்க்கிறேன். புஷ்கலை மற்றும் உடன் இருந்தவர்கள் பயப்படுவது போன்ற முகபாவனை பார்த்தேன். அப்போது,  வெறும் ஒளி மட்டும்தான், நிஜமான விலங்குகள் இல்லை  என ப்ரொஜெக்டர் போன்ற ஒரு  சாதனத்தில்  ஒளி வருவதை ஒருவர் காண்பித்தார்.

சிறிது நேரத்தில் கட்டில் மெத்தையில் சிறிய வயது சுதிஷ், புஷ்கலை, உடன் பெத்தனாச்சி ( எனது மகன், மகள், மனைவி ) தூங்கிக் கொண்டிருந்தனர்.


21-50-2019, கனவு 1

நான் ஒரு வேன் போன்ற வாகனத்தில் டிரைவர் அருகில் அமர்ந்து பயணம் செய்கிறேன். திருச்சுழி செல்லும் ரோடு போல தெரிகிறது.

டிரைவராக இருப்பவர் எனது நண்பர் போல பேசிக்கொண்டே வேன் ஓட்டுகிறார்.

ரோட்டின் இடதுகை பக்கம் சமையல் கேஸ் சிலிண்டர்கள் உள்ள லாரிகள் நிறைய நின்றன.  அதன் அருகில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். லாரி டிரைவர்கள், கிளீனர்கள் சிலிண்டர்கள் நடுவே படுத்து தூங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

அந்த இடத்தின் வலது பக்க ரோட்டின் ஓரத்தில் இரு மரங்களுக்கு நடுவில் நாங்கள் சென்ற வேனை நிறுத்தினார். நாமும் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றுவதற்கு வந்தோமா ? என  டிரைவரிடம்கேட்டேன்.


செவ்வாய், 14 மே, 2019

14-5-2019 கனவு 2

கனவு 2

ஒரு பொது பாத்ரூம் அருகில் இருக்கிறேன். பாத்ரூமில் இருக்கும் பொழுது மனநிலை சரியில்லாத ஆள் போலவும், பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றம் உள்ள ஒரு நபர் கதவை திறந்து கொண்டு உள்ளே வர நிற்கிறார். முகம் விபூதி, குங்குமம், மஞ்சள் போன்றவை எல்லாம் அளவுக்கு அதிகமாகவும், பார்ப்பதற்கு அகோரமாகவும் தெரிந்தார். நான் பதட்டம் கலந்த கோபத்துடன் சத்தம் போட்டேன். கதவை ஓங்கி மூடினேன்.

சிறிது நேரத்தில் யாரோ கதவை திறப்பது போல தெரிந்தது. முதலில் வந்த அகோர முகம் உள்ள நபர்தான் என நினைத்து கோபத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே கதவை திறந்தேன். வேறுநபர் தெரிந்தார். முந்தைய நபரின். தோற்றத்திற்கு நேர் எதிரான முக தோற்றம். விபூதி, குங்குமம், மஞ்சள் அனைத்தும் அழகாக பூசப்பட்டு, நல்ல சிரித்த முகத்துடன், லட்சணமான தோற்றத்துடன் தெரிந்தார்.
அவரைப் பார்த்ததும் தெரியாமல் வைதுவிட்டேன், சாரி என்றேன்.

பின் அருகில் சில கோவில் பூசாரிகள் கண்ணில் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்ததும், அனைவரும் வந்து செல்லும் சுத்தமான பொது பாத்ரூமிற்குதான் நானும் வந்துள்ளேன் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

14-05-19, கனவு 1

கனவு 1

ஒரு திரையரங்கத்தில் இருக்கிறேன். எனது அருகில் தேவி அக்கா இருக்கிறார்கள். எங்களது முன் வரிசை சீட்டில் பெத்தனாச்சி அமர்ந்து இருக்கிறாள். அவளின் வலது சீட்டில் சிறு குழந்தையை அமர வைத்திருக்கிறாள். அதற்கு அடுத்த சீட்டில் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரது மனைவி உட்கார சீட் இல்லாமல் அந்த குழந்தையை பார்த்தவண்ணம் நிற்கிறார்கள். பெத்தனாச்சியிடம் குழந்தையை ஓரமாக உட்காரவைத்து அவர்களுக்கு இடம் கொடு என்றேன். ஏதோ வாய்க்குள் முனுமுனுத்தாள். எனக்கு கோபம் வந்தது. பொறுமையாக, தேவியிடம் இதுக்குத்தான் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சண்டை வருது என்றேன்.  பெத்தனாச்சி அந்த குழந்தையை சற்று ஓரமாக உட்கார வைத்தாள்.

ஞாயிறு, 12 மே, 2019

அறிமுகம்

நான் தினமும் காண்கின்ற கனவுகள் பற்றிய விபரங்கள் இங்கு பதிவு செய்ய இருக்கிறேன்.