புதன், 5 ஜூன், 2019

03-06-2019 கனவின் விளக்கங்கள்

நேற்று முன்தினம் 3-6-19 திங்கள் கிழமை நடு இரவில் நான் பார்த்த கனவு இன்று காலை நிஜத்தில் நடந்தாக உணர்கிறேன்.

சுப்பையா தெருவில் புஷ்கலையுடன் வரும் மற்றவர்களுக்கு சாதாரண பெண் போல தெரியும் பெண் பேயாக மாறி காற்றில் கலந்து என் உடம்பில் வேகமாக மோதி தாக்குதல் நடத்துவது போல் கனவு காட்சி கண்டேன். உதவிக்கு பாலாவை கூப்பிட முயற்சி செய்தேன், அதற்குள் தாக்குதல் நடந்தேறியது.

இன்று காலை பெத்தனாச்சி என்னிடம் வருமானம் குறைவாக இருப்பதால் எனக்கு சென்னையில் பேக்கரி ஒன்றில் வேலை கேட்டுக்கொண்டிருப்பதாக சொல்லி என்னிடம் சண்டை போட்டாள்.

ஆனால் நேற்றுதான் பாலா வசம் கம்ப்யூட்டர், லேப்டாப் சர்வீஸ் செய்து பணம் சம்பாதிப்பது பற்றி பேசியுள்ளேன். அதற்குள் பெத்தனாச்சி சண்டை போடுகிறாள்.

கனவிற்கும், நிஜத்திற்கும்  சுமார் 90 சதவீதம் விபரங்கள் ஒத்துப் போவதால் கனவின் மூலம் எதிர்வரும் நிகழ்வுகளை சிறிது புரிந்துகொள்ள முடிகிறது என தொன்றுகிறது.

திங்கள், 3 ஜூன், 2019

03-06-2019 கனவு

நடு இரவு சுமார் 2.15 மணி கனவு.

நான் சுப்பையா தெருவில், கீதன் வீட்டின் கிழக்கு தெருவில் இருக்கிறேன். அப்போது ஒரு சினிமா நடனக்காட்சி அந்த இடத்தில் நடக்கிறது. அதே காட்சி டிவியிலும் தெரிகிறது. ஆச்சரியமாக பார்க்கிறேன். நமது தெருவில் எப்போது சினிமா எடுத்தார்கள் என்று யோசிக்கிறேன். கீதன் வீட்டு கோட்டை சுவரில் பச்சை வண்ணம், அதில் மஞ்சள் வண்ணத்தில் கோடுகள் தெரிகிறது.

அப்போது ஏதோ ஒரு புகை போன்ற பொருள் கீதன் வீட்டிலிருந்து சந்திக்கு கிழக்கில் உள்ள வைரம் மெடிக்கல் அருண் வீட்டிற்குள் வேகமாக ஒரு செகன்டில் சென்றதைப் பார்த்தேன். கோட்டைச் சுவரில் இருந்து சுவர் வழியாகவே சென்றது.

அந்த பெண் பேய் வந்துவிட்டது என கத்தினேன். சத்தம் வரல.  அருகில் சிலரிடம் கீதனை கூப்பிட்டால் அவன் வர இயலாது. பாலாவை கூப்பிடுங்கள் அவனுக்கு அந்த பேய் கட்டுப்படும் என்றேன்.

மாதவ மூர்த்தி டாக்டர் வீட்டு முக்கில் நின்று பாலாவின் பெரியம்மா வீட்டை நோக்கி பாலா என கத்தினேன். சத்தம் வரல.

அதற்குள் உடன் இருந்தவர்கள் அந்தப்பக்கம் எதுவும் இல்லை, ஒரு பெண் இரு சிறுமிகளும் பேசிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றனர்.

உங்களுக்கு சரியாய் தெரியல. பெண் பேய் வருகிறது என்றேன். நான் சென்று பார்த்தேன், அதற்குள் சந்திலிருந்து 3 நபர் திரும்பினர். புஷ்கலை ஒருபக்கம், இன்னொரு சிறுமி மறுபக்கம் நடுவில் ஒரு பெண் சாதாரணமாக இருந்தனர்.

நடுவில் இருந்த பெண் என்னைப் பார்த்ததும் கண்களை நன்கு விரித்து என்னை கோபத்துடன் பார்த்து முறைத்தாள். உடனே நான் விடமாட்டேன் என்று மெல்ல சொல்லி முடிப்பதற்குள் காற்றாக மாறி என் உடம்பில் வேகமாக மோதினாள்,

செவ்வாய், 21 மே, 2019

21-05-2019, கனவு 2

ஒரு ரூமில் உள்ள சுவற்றின் வழியாக விலங்குகள் வருவது போல் பார்க்கிறேன். புஷ்கலை மற்றும் உடன் இருந்தவர்கள் பயப்படுவது போன்ற முகபாவனை பார்த்தேன். அப்போது,  வெறும் ஒளி மட்டும்தான், நிஜமான விலங்குகள் இல்லை  என ப்ரொஜெக்டர் போன்ற ஒரு  சாதனத்தில்  ஒளி வருவதை ஒருவர் காண்பித்தார்.

சிறிது நேரத்தில் கட்டில் மெத்தையில் சிறிய வயது சுதிஷ், புஷ்கலை, உடன் பெத்தனாச்சி ( எனது மகன், மகள், மனைவி ) தூங்கிக் கொண்டிருந்தனர்.


21-50-2019, கனவு 1

நான் ஒரு வேன் போன்ற வாகனத்தில் டிரைவர் அருகில் அமர்ந்து பயணம் செய்கிறேன். திருச்சுழி செல்லும் ரோடு போல தெரிகிறது.

டிரைவராக இருப்பவர் எனது நண்பர் போல பேசிக்கொண்டே வேன் ஓட்டுகிறார்.

ரோட்டின் இடதுகை பக்கம் சமையல் கேஸ் சிலிண்டர்கள் உள்ள லாரிகள் நிறைய நின்றன.  அதன் அருகில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். லாரி டிரைவர்கள், கிளீனர்கள் சிலிண்டர்கள் நடுவே படுத்து தூங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

அந்த இடத்தின் வலது பக்க ரோட்டின் ஓரத்தில் இரு மரங்களுக்கு நடுவில் நாங்கள் சென்ற வேனை நிறுத்தினார். நாமும் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றுவதற்கு வந்தோமா ? என  டிரைவரிடம்கேட்டேன்.


செவ்வாய், 14 மே, 2019

14-5-2019 கனவு 2

கனவு 2

ஒரு பொது பாத்ரூம் அருகில் இருக்கிறேன். பாத்ரூமில் இருக்கும் பொழுது மனநிலை சரியில்லாத ஆள் போலவும், பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றம் உள்ள ஒரு நபர் கதவை திறந்து கொண்டு உள்ளே வர நிற்கிறார். முகம் விபூதி, குங்குமம், மஞ்சள் போன்றவை எல்லாம் அளவுக்கு அதிகமாகவும், பார்ப்பதற்கு அகோரமாகவும் தெரிந்தார். நான் பதட்டம் கலந்த கோபத்துடன் சத்தம் போட்டேன். கதவை ஓங்கி மூடினேன்.

சிறிது நேரத்தில் யாரோ கதவை திறப்பது போல தெரிந்தது. முதலில் வந்த அகோர முகம் உள்ள நபர்தான் என நினைத்து கோபத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே கதவை திறந்தேன். வேறுநபர் தெரிந்தார். முந்தைய நபரின். தோற்றத்திற்கு நேர் எதிரான முக தோற்றம். விபூதி, குங்குமம், மஞ்சள் அனைத்தும் அழகாக பூசப்பட்டு, நல்ல சிரித்த முகத்துடன், லட்சணமான தோற்றத்துடன் தெரிந்தார்.
அவரைப் பார்த்ததும் தெரியாமல் வைதுவிட்டேன், சாரி என்றேன்.

பின் அருகில் சில கோவில் பூசாரிகள் கண்ணில் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்ததும், அனைவரும் வந்து செல்லும் சுத்தமான பொது பாத்ரூமிற்குதான் நானும் வந்துள்ளேன் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

14-05-19, கனவு 1

கனவு 1

ஒரு திரையரங்கத்தில் இருக்கிறேன். எனது அருகில் தேவி அக்கா இருக்கிறார்கள். எங்களது முன் வரிசை சீட்டில் பெத்தனாச்சி அமர்ந்து இருக்கிறாள். அவளின் வலது சீட்டில் சிறு குழந்தையை அமர வைத்திருக்கிறாள். அதற்கு அடுத்த சீட்டில் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். அவரது மனைவி உட்கார சீட் இல்லாமல் அந்த குழந்தையை பார்த்தவண்ணம் நிற்கிறார்கள். பெத்தனாச்சியிடம் குழந்தையை ஓரமாக உட்காரவைத்து அவர்களுக்கு இடம் கொடு என்றேன். ஏதோ வாய்க்குள் முனுமுனுத்தாள். எனக்கு கோபம் வந்தது. பொறுமையாக, தேவியிடம் இதுக்குத்தான் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சண்டை வருது என்றேன்.  பெத்தனாச்சி அந்த குழந்தையை சற்று ஓரமாக உட்கார வைத்தாள்.

ஞாயிறு, 12 மே, 2019

அறிமுகம்

நான் தினமும் காண்கின்ற கனவுகள் பற்றிய விபரங்கள் இங்கு பதிவு செய்ய இருக்கிறேன்.